• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றம் வீர விளையாட்டு போல் நடக்கிறது சட்டமன்றமாக தெரியவில்லை விளையாட்டு மன்றமாக உள்ளது-சீனிவாசன் பேட்டி..,

Byp Kumar

Sep 5, 2026

செக் இழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் – திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே வ உ சி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று 05.09.26 மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கிமுத்து மீண்டும் எம்எல்ஏவாக தொடர்வதற்காக சபாநாயகிடம் கடிதம் கொடுத்தது குறித்த கேள்விக்கு

என்னுடைய ஆய்வில் உள்ளது சட்டசபை கூட்டம் முடிவடைந்த உடன் பதில் சொல்கிறேன் என சபாநாயகர் கூறியுள்ளார் .

சபாநாயகர் எது சொன்னாலும் நீதிமன்றம் தான் முடிவு செய்யும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடியார் நீதிமன்றம் சென்றுள்ளார் .

நீதிமன்றம் தான் இறுதி தீர்ப்பு நிலையில்லாத வாழ்க்கை எப்படி உள்ளது என்று பாருங்கள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு என்ன குதிரை பேரும் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பதவியே ரஜினாமா செய்துள்ளார். மறுபடியும் நான் எம்எல்ஏவாக தொடருகிறேன் என்று சொல்வது குழந்தைகள் கூட தெரியும் செல்லாது என்று தேவையில்லாமல் சபாநாயகரிடம் மனு கொடுத்து கதாநாயகன் போல் காட்டுகிறார் இறுதி முடிவு நீதிமன்றம் தான் முடிவு செய்யும் .

ஏற்கனவே சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த யசோதா பொன்னம்பலம் அமர்ந்து உள்ளனர் தற்பொழுது தாவிக்காக சத்தியபாமாவை நாங்கள் தான் பெண் தற்காலிக சபாநாயகர் அமைத்துள்ளோம் என கூறி வருவது குறித்த கேள்விக்கு

ஏற்கனவே பல பெண்கள் எம்எல்ஏக்கள் சபாநாயகராக இருக்கையில் அமர்ந்துள்ளனர் எல்லாமே முதலில் தாங்கள் தான் செய்தது போல் ஆளும் கட்சியினர் காட்டுகின்றனர் அது பொய் உண்மைக்கு மாறானது தவறானது தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

1200 கோடி செலவில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு

தான்தோன்றித்தனமாக அரசு செயல்படுகிறது எதையும் செய்யலாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம் இவர்கள் புதிதாக கட்டுவது போல் காண்பிக்கிறார்கள் என்ன நடக்கப்போவது என்ன முடிய போகிறது என்பதை தெரியாது. சுதந்திரம் வாங்கினதுக்கு பின்பு உள்ள அனைத்து முதலமைச்சர்களும் இந்த சட்டமன்றத்தில் அரங்கில் தான் இருந்துள்ளனர் இதன் முடிவு என்னவென்று தெரியாது.

மேட்டூர் அணைக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்து வந்து சென்ற முதலமைச்சர் குறித்த கேள்விக்கு

காஸ்ட்லி முதலமைச்சர் என எடப்பாடி யார் உதயநிதி சொல்லிவிட்டார்கள்.

கூட்டணி கட்சித் தலைவர்களை அமைச்சர்கள் சென்று பார்த்திருப்பது குறித்த கேள்விக்கு

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகுவதற்கான சூழ்நிலைகளை சொல்லிவிட்டார்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் எதிலும் இருக்க மாட்டோம் எங்களது கொள்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவருடன் இருப்போம் என்று இரண்டு பேரும் சொல்லிவிட்டார்கள் ஆல்மோஸ்ட் விலகுகிறோம் எனக் கூறிவிட்டார்கள்.

பிரதமர் ராகுல் தான் என சொல்லவில்லை என்றால் காங்கிரஸ் விளக்குவோம் என கூறிவிட்டார்கள் இவர்களை எல்லாம் சரி பண்ணுவதற்காக தான் கூட்டம் நடத்துகிறார்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்

விஜய் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கூறி ஒரு குறித்த கேள்விக்கு

அதிகாரபூர்வமாக இதனை மறுக்க வேண்டியது முதலமைச்சர் விஜய் மந்திரிகளை விட்டு அடுத்த பிரதமர் விஜய் தான் என்ன பேச விடுகிறார்கள் ராகுல் தான் பிரதமர் என சொல்ல வேண்டியது முதலமைச்சர் பிரதமர் ஆக வேண்டிய ஆசை விஜய்க்கு இருக்கிறது என்று தான் அர்த்தம் இரட்டை வேடம் போடுகிறார்கள் நடிகர் விஜய் தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதி தேர்தலுக்குப் பின்பு ஒரு வாக்குறுதி என பொய்யான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் இதனை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்

கூட்டணிக் கட்சிகளுக்கு தவெகவினர் மிரட்டல் கொடுக்கிறார்களா அல்லது அழுத்தம் கொடுக்கிறார்களா என்ற கேள்விக்கு

அழுத்தம் அல்ல மிரட்டல் என்று சொல்ல முடியாது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எங்கள் கொள்கை தொழிலாளர்கள் கொள்கை சரியாக நடந்தால் ஆதரவு தருவோம் இல்லையென்றால் வரமாட்டோம் எனத் தெளிவாக சொல்கிறார்கள் பரம்பரிய கட்சியான நாங்கள் சொல்வதைக் கேட்டால் ஆதரவு தருவோம் இல்லை என்றால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்

சட்டசபையில் இருந்து முதலமைச்சர் திடீரென வெளியே சென்றது குறித்த கேள்விக்கு

முதலமைச்சர் வெளியே செல்வதற்கு உரிமை உண்டு பத்து நிமிடம் இருந்து உட்கார்ந்து விட்டு சென்றிருக்கலாம் வீர விளையாட்டு போல் நடக்கிறது சட்டமன்றமாக தெரியவில்லை விளையாட்டு மன்றமாக நடக்கிறது பொறுப்பான முதலமைச்சராக இருந்தால் எதிர்க்கட்சிகள் சொல்வதை கேட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும் கத்தி சண்டை ஒன்னும் போடவில்லை சட்டமன்றத்தில் இருக்க சொல்வது நியாயமானது மிரட்டுவது என இரண்டு பர்பஸ் உள்ளது.