• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பசு மாடுகளை திருடிச் சென்ற திருடர்களை கைது செய்த போலீசார்..,

ByPuthar Pandian P

Sep 3, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மட்டப்பாறைச் சேர்ந்த கண்ணன் வயது 45) என்பவர் விவசாயி ஆவார். இவருடைய தோட்டத்தில் இருந்த 2 பசு மாடுகள் மர்ம நபர் திருடி சென்றனர்.

இது குறித்து கண்ணன் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்
அதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை மட்டப்பாறையைச் சேர்ந்த ராமமூர்த்தி வயது 36) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது 2 மாடுகளை திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார், 2 மாடுகளை கரட்டுபட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 39) என்பவர் வேனில் ஏற்றி கொண்டு திருச்சி மணப்பாறையில் சந்தையில் விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.

மேலும் ராமமூர்த்தி முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் 2 போ்களையும் கைது செய்தனர். 30 ஆயிரம் பணம், ஒரு வேன் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தல் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.