• Sat. Mar 22nd, 2025

ரயிலில் விழுந்து இளம்பெண் மற்றும் மினிபஸ் ஓட்டுநர் தற்கொலை

தேனி அருகே ரயிலில் விழுந்து இளம்பெண் மற்றும் மினிபஸ் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டனர். திருமணத்தை மீறிய உறவால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தேனி அருகே குன்னூரில் உள்ள வைகை ஆற்றின் அருகாமையில் செல்லக்கூடிய மதுரை – போடிநாயக்கனூர் ரயில் தண்டவாளத்தில் இன்று ஆண் – பெண் இருவரது சடலங்கள் கிடப்பதாக தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ஆய்வு செய்ததில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 40 வயதான ஆண் இருவரது உடல்களும் முற்றிலும் சிதைந்து துண்டு துண்டாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது சடலங்களையும் கைப்பற்றிய ரயில்வே போலீசார் உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்டமாக சம்பவ இடத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவிற்கு உட்பட்ட ஆண்டிபட்டி அருகே உள்ள குதிரையாறு அணை பகுதியைச் சேர்ந்த 35 வயதான மணிகண்டன் எனத் தெரியவந்தது. மினி பஸ் ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்தில் இறந்த பெண் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகளான 21 வயதான சம்யுக்தா எனத் தெரியவந்தது. இவரை காணவில்லை என்று அவரது பெற்றோர் அளித்த புகாரில் நேற்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து சம்யுக்தாவை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இவர் இன்று மணிகண்டன் உடல் சடலமாக கண்டறியப்பட்டார்.

இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், நேற்று இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு வந்தவர்கள் சம்பவ இடத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் விசாரணையின் முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.