


சத்துணவு சமையலர் உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் சத்துணவு திட்டத்திணை சீராக செயல்படுத்த உடனடியாக நிரப்பப்படவேண்டிய 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பி கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சமையல் உதவியாளர் பணியிடம் ஏற்ற பணியிடம் என கண்டறிந்து, மேற்காண் பணியிடங்களை நிரப்பும் போது அவ்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்யவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள—- சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி
தெரிந்துகொள்ளலாம்.
சத்துணவு மையங்களில் வாரியாக சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுவோருக்கு, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும். பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay -ரூ.3000- 9000)) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைபட்ட தூரம் 3 கி.மீ.-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி- குக்கிராமம்-வருவாய் கிராமம் போன்றவைகள்கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும் .

