



விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் 23வது வட்டம் திருவள்ளுவர் காலனி பகுதியை சார்ந்த சேவியர் குழுவினர் வேளாங்கண்ணி யாத்திரை செல்வது வழக்கம். அதுபோல் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்ல இருப்பதாக பாதயாத்திரை குழுவினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் தெரிவித்தனர். அவரும் பாதயாத்திரை குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ரூ10ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

