• Tue. Apr 22nd, 2025

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,

ByK Kaliraj

Apr 9, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 55) இவரது தந்தை அருணகிரி (வயது 85) ஆடு மேய்க்கும் தொழிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

அருணகிரி கடந்த 29ஆம் தேதி ஆடு மேய்த்து விட்டு தேன் எடுக்க சென்று வருவதாக மகன் குருசாமியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். சொன்னவர் வழக்கத்திற்கு மாறாக வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடினர். மேலும் அவர் காணதது குறித்து ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து பல்வேறு பகுதியில் தேடி வந்தனர்.

கீழாண்மறைநாடு வைப்பாற்று பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் தனியார் அட்டை மில் பின்புறம் எலும்புக்கூடுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆலங்குளம் போலீசார் மற்றும் குருசாமி குடும்பத்தினர் அப்பகுதிக்கு சென்ற போது உடலின் சில பாகங்கள் மட்டும் காணப்பட்டது . உடலில் பெரும்பாலன பகுதி நாய்களோ அல்லது வனவிலங்குகளோ தின்றுள்ளன.

அருகில் வேட்டி, உணவுக்காக கொண்டு செல்லப்பட்ட தூக்குச்சட்டி மற்றும் தேன் எடுக்கும் பாத்திரம் இருந்தது. இறந்த நபர் அருணகிரி என உறுதிப்படுத்தப்பட்டது. மர்மமான முறையில் இறந்தது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருணகிரி எப்படி இறந்தார் என்பது தெரியாதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..