• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கள்ளழகர் மெகா எதிர்சேவை சமபந்தி விருந்து..,

ByKalamegam Viswanathan

May 1, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் எதிர் சேவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா கடந்த 150 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

வளையங்குளம் கிராமத்தில் உள்ள தானாக முளைத்த தனி லிங்கம் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சுமார் நான்கு டன் அரிசி சமையல் செய்து சாதம்| தயாராகிறது.

800 கிலோ கத்திரிக்காய் 600 கிலோ உருளைக்கிழங்கு 300 கிலோ முருங்கைக்காய் 400 கிலோ சௌசௌ காய் 300 கிலோ தக்காளி 700 கிலோ வெங்காயம் 1 ஆயிரம் கிலோ துவரம்பருப்பு ஆகிய பொருட்கள் கொண்டு சமையல் தயார் செய்யப்படுகிறது.

பின்னர் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்த தீர்த்த வாரி நடைபெற்ற பின் அன்னதானம் நடைபெறுகிறது

மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறும் சமபந்தி நிகழ்ச்சியில் சோளங்குருணி,நல்லூர் எலியார்பத்தி, பாரப்பத்தி , நெடுமதுரை கொம்பாடி ஆலங்குளம் வலையபட்டி பெருங்குடி அவனியாபுரம் ,காரியாபட்டி, மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வலையங்குளத்தில் நடைபெறும் மெகா சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

பத்தாயிரம் பேர் கலந்து கொன்றும் மெகா சமபந்தி விருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளையங்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர் .