மதுரை மாநகரில் எல்லீஸ் நகர் தனியார் திருமண மண்டபத்தில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மகளிர் உரிமைத்தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்,துணை மேயர் நாகராஜன், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி, விஜயா குரு, ஜென்னியம்மாள்,கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ராஜேந்திரன்,மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் கயிலைச் செல்வம்,மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.