வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அழகர் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் கள்ளழகராக நேற்று இரவு 9.30 மணியளவில் சித்திரேவு கிராமத்திலிருந்து பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கிளம்பி அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றுக்கு வருகை தந்தார் வரும் வழியில் மண்டகப்படிகள் மற்றும் எதிர் சேவையை தொடர்ந்து இன்று காலை 7.15 மணி அளவில் பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.

கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்த பக்தர்களுக்கு பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் கள்ளழகர் கோலத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காட்சியளித்தார்.
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.




