• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி..,

வேடசந்தூர் பகுதியில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஏரியோடு, குஜிலியம்பாறை, வாண்ராயன்பட்டி, பாளையம், கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மரம் மற்றும் செடி முருங்கை அதிகளவு விவசாயிகள் பயிரிடப்பட்டு உள்ளனர்.

முருங்கைக்காயை விவசாயிகள் அறுவடை செய்து உள்ளூர் வியாபாரிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெடில் நேற்று (வியாழக்கிழமை) ஒரு கிலோ செடி முருங்கை ரூ 13 க்கும், மரம் முருங்கை ரூ 18 க்கும் கருப்பு முருங்கை ரூ 20 க்கும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 100 வரை வியாபாரிகளால் வாங்கப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்போது அதிக வரத்தால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை தாலுகா பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.