• Tue. Oct 3rd, 2023

ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நகர் முழுவதும் போஸ்டர்…

ByKalamegam Viswanathan

Sep 15, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடி மங்கலம் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சோழவந்தான் மன்னாடி மங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், போஸ்டர் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 16 மாதங்களாக மண்ணாடி மங்கலம் ஊராட்சியில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது மற்றும் வேலை கோரும் தலித் பெண்களுக்கு வேலை கொடுக்காமல் வன்கொடுமை செய்வதற்கு தனது ஊராட்சி செயலாளர் பதவியை பயன்படுத்துவது மற்றும் 21 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணி செய்வதால் அதிகாரிகளை மதிக்காமல் காட்டு தர்ப்பார் நடத்துவது உள்ளிட்டவைகளை கண்டித்தும், ஆகையால் இதற்குக் காரணமான மன்னாடிமங்கலம் ஊராட்சி செயலாளர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் மன்னாடிமங்கலம் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் ஊராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய விசாரணை செய்து புகார் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *