அடமானம் என்ற பெயரில் கிரையமாக எழுதி வாங்கியும், கொலை மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு
அந்த மனுவில் கூறியிருப்பதாவது ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சுப்புலட்சுமி அந்தப் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது அம்மா வகையில் சேர வேண்டிய சொத்து பவானி கூடுதுறை கச்சேரி வீதியில் உள்ளது. தன் சொந்த தேவைக்காக அடமானம் வைக்க கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருக்கம்பாளையம் முருகன் மகன் பூபதி ராஜா, மற்றும் சித்ரா ஆகியர்களை அணுகினேன் மேற்படி இருவரும் என் வீட்டை அடமான வைத்து இரண்டு லட்சம் தருவதாக சொல்லி மேற்படி வீட்டை அடமானம் பத்திரம் எழுதி தர வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் பத்திரம் எழுதும் நபர் லோகநாதனிடம் சென்று கடன் பத்திரம் எழுதாமல் கிரைய பத்திரமாக எழுதிக் கொண்டனர். மேலும் சம்பந்தமாக நான் கேட்டபோது அப்படித்தான் எழுத வேண்டும் என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் சொன்ன ரெண்டு லட்சம் பணத்தையும் எனக்கு தரவில்லை. இது சம்பந்தமாக குடும்பத்துடன் சென்று கேட்ட பொழுது என்னை கொலை செய்வதாக சொல்லி மிரட்டுகிறார்கள். என்னை ஏமாற்றி என் வீட்டின் பத்திரத்தை பதிவு செய்து கொண்ட மேற்கொண்ட நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அந்த மனுவின் கூறியிருந்தனர்.