• Sat. Apr 20th, 2024

வீட்டை இடிக்க வழங்கப்பட்டள்ள ஆணையை ரத்து செய்யவேண்டும் -கலெக்டரிடம் மனு

40 வருடங்களாக குடியிருக்கும் வீட்டை இடிப்பதாக ஆணை ரத்து செய்ய கலெக்டர் இடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது..ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமம் மேற்கொண்ட விலாசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். சிவகாமி ஆகிய நான் கடந்த 4. 12, 2022 தேதியில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கு சீராய்வு மனு அளிக்கப்படுகிறது.
வருவாய் அலுவலர் விசாரணையின் போது கிராம நிர்வாக அலுவலர் தாக்கல் செய்த வாக்கு மூலத்தில் ரீ சர்வே எண் 265/18,0,00,79 பரப்பளவு உள்ள இடம் சர்க்கார் புறம்போக்கு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பு காலத்தில் கருப்புசாமி கோயில் காலியிடம் என்று கூறியுள்ளனர்.2,1905 ஆம் ஆண்டு 111 ஆவது சட்டத்தின் 3- ஆம் பிரிவின் கீழ் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடிதம் அனுப்பி உள்ளார்கள். ஆனால் மேற்கொண்ட பிரிவின் கீழ் குடியிருந்து வருபவர்கள் நிலத்தின் மீது அனுபவத்தில் இருக்கிறார்களோ இடத்தை அளந்து அவர்களுக்கு உரிமை உடையதாக வேண்டுமென்று மூன்றாம் சட்டத்தின் பிரிவு அதை அரசு தன் உடமையாக கருதக்கூடாது என்று உள்ளது.
1920 ஆம் ஆண்டிலிருந்து பழைய சர்வே எண்186/0 இதற்கு புதிய ரி சர்வே எண் 265/18 இந்த இடம் சர்க்கார் புறம்போக்கு இடமாகவே உள்ளது.மேற்படி கருப்புசாமி கோவில் காலியிடம் என்று இந்த ஆவணமும் இல்லை.சுமார் 35 ஆண்டுகள் குடியிருப்பாகவே பயன்படுத்தி வருகிறோம். மேற்படி வீட்டுக்கு முறையாக வீட்டு வரி ரசீதும், மின் இணைப்பு ரசீதும், குடிநீர் இணைப்பும் பெறப்பட்டுள்ளது.கோயிலுக்கு என்று எந்த ஒரு முறையான ஆவணமும் இல்லாமலும்,முறையான விசாரணை இல்லாமலும் அன்றாட தின கூலி வேலைக்குச் செல்லும் நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் எனது கணவர் உழைக்கும் திறனின்றி காச நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார்.
நானும் எனது மகனும் கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வைத்து தான் ஜீவன் செய்து வருகிறோம். ஆகவே தாங்கள் முறையாக விசாரணை செய்து நாங்கள் குடியிருக்கும் வீட்டை இடிக்க வழங்கப்பட்டுள்ள ஆணையை ரத்து செய் வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *