நம் பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான்.தற்போது செவ்வாய்கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நாம் வாழும் பூமிக்கு மிக அருகில் உள்ளது செவ்வாய்கிரகம் .நிலவில் இறங்கி சாதனை படைத்த அமெரிக்கா செவ்வாய் கிரத்திற்கும் மனிதர்களை அனுப்ப பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அனேகமாக 2030ம் ஆண்டுக்குள் மனிதர்கள் செவ்வாய்கிரகத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.மேலும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலன்மஸ்க் 2050ம் ஆண்டுவாக்கில் செவ்வாய்கிரகத்தில் ஒரு நகரத்தையே உருவாக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது செவ்வாய் கிரகத்தில் இன்சைட் லேண்ட்ர் பல்வேறுவிதமாகஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா என்றும் இந்த InSight லேண்டர் ஆய்வுகளை மேற்கொள்ளும். அந்த வகையில்தான் தற்போது InSight மூலம் செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் 4.2 ரிக்டர் அதன்பின்னர் 4.1 ரிக்டர் அளவில் அங்கு பெரிய இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் முழுக்க பல இடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இது 5 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது. அதோடு இது மிக நீண்ட நேரம் ஏற்பட்டதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். . அதிலும் அங்கு முதல் நிலநடுக்கம் 94 நிமிடங்கள் நீடித்து உள்ளது. ஒன்றரை மணி நேரம் செவ்வாய் கிரகம் குலுங்கி உள்ளது. நம் பூமியில் கடல்கள் மேல் நகரும் கண்டத்திட்டுகளால் நிலநடுக்கம் ஏற்படுகிறது.ஆனால் கடல்களே இல்லாத செவ்வாய் கிரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கமா?
