• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஒரே மாதத்தில் 45 லட்சம் இந்தியர்களின் வாட்ஸப் கணக்குகள் முடக்கம்..!

Byவிஷா

May 2, 2023

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 45லட்சம் இந்தியர்களின் வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தடை செய்யப்பட்ட மொத்த கணக்குகளில் 16 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் முடக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. மிஞ்சிய 28,50,000 கணக்குகள் மீது சக பயனர்களிடம் இருந்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.