வடபழனி சிக்னல் நான்குமுனை பகுதியில் வணிகர் சங்கமும் காவல்துறையினரும் இணைந்து பொதுமக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா:
வடபழனி சிக்னல் நான்குமுனை பகுதியில் வடபழனி(R-8) போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சங்கமும் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடை பெற்றது.இந்த தண்ணீர் பந்தலை வடபழனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாம் பெனட் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து துவக்கி வைத்தார்.
அதன் பின்னர்பொதுமக்களுக்கு குளிர்பானம்,தர்பூசணி பழங்கள், மோர், போன்றவை வழங்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலை வடபழனி (R-8)போக்குவரத்து காவல்துறையினரே பராமரிப்பதாக கூறி உள்ளார்.இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சென்னை மண்டலத்தலைவர் ஜோதியார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அரிமா பன்னீர்செல்வம்,செயலாளர் பாலன்,பொருளாளர் வீரபாண்டியன், கெளரவ தலைவர் அரிமா தா.ரங்கன், செய்தி தொடர்பாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.