கரூர் காவிரி ஆற்றில் இருந்து நீர் ஊந்து கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் பாளையம், கோவிலூர், ஏரியோடு, வேடசந்தூர் ஆகிய ஊர்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கோவிலூர் செல்லும் சாலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக பெருக்கெடுத்து ஓடியது.
எரியோட்டில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் சாலையில் செல்வதால் திண்டுக்கல் – கரூர் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் எரியோட்டை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
உடனடியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் தரமுள்ளதாக அமைத்து குழாய் உடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



