• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வீடுகளின் வெளியே துணிகளை அள்ளும் விசித்திரத் திருடன் !!!

BySeenu

Jun 23, 2026

​ கோவையின் மிக முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எஸ்.புரம் ஏரியாவில், பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளைக் குறி வைத்து, வெளியில் காயப் போடப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த ஆடைகளைத் திருடிச் செல்லும் விசித்திரத் திருடன் ஒருவனின் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி, கோவை மக்களிடையே பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல பால் கம்பெனிக்கு அருகே அமைந்து உள்ள குடியிருப்பு வீதிகளில், பெரும்பாலான நடுத்தர மற்றும் உயர் வர்க்கக் குடும்பத்தினர் காலையிலேயே தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று விடுகின்றனர். இந்த ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பக்காவாக நோட்டமிடும் மர்ம ஆசாமி ஒருவன், வீட்டின் காம்பவுண்ட் சுவர்களுக்கு வெளியேயும், உலர வைக்கப்பட்டு இருக்கும் ஆடைகளைத் திருடிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளான்.

​துவைத்து காயப் போடப்பட்ட ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் தினசரி மாயமாவது குறித்து, “ஒரு சாதாரணத் துணி காணாமல் போனதற்குப் போய் போலீஸ் ஸ்டேஷனில் எப்படி ‘எஃப்.ஐ.ஆர்’ (FIR) போடுவது, யாரிடம் போய் புகார் அளிப்பது ?” என்று தெரியாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுடனும் அவமானத்துடனும் ‘உள்விவரம்’ வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது அந்தப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் காலையில் காயப் போட்டு இருந்த ஆடைகள் திடீரென காணாமல் போயுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், அக்கம், பக்கத்தில் மற்றும் தனது வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை பார்த்து உள்ளார். ​அப்போது கேமரா பதிவில் சிக்கிய அந்த காட்சி, ஒட்டுமொத்த ஏரியா வாசகர்களையும் வாயடைக்க வைத்து உள்ளது.

அந்த வீடியோவில், பாரம்பரிய லுங்கி மற்றும் வெள்ளைச் சட்டை அணிந்து கொண்டு, அப்பாவியைப் போல அந்த வீதியில் உலா வரும் நபர் ஒருவர், யாரும் பார்க்காத நொடியில் கொடியில் காய்ந்து கொண்டு இருந்த துணிகளை அசுர வேகத்தில் சுருட்டிக் கொண்டு நைசாக எஸ்கேப் ஆகும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

இந்த விசித்திரத் திருடனின் வீடியோ பதிவுகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகி, ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பி உள்ளது.