• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய தவெக கட்சியின் வழக்கறிஞர்கள்..,

ByP.Thangapandi

Jun 23, 2026

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய்- ன் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தவெக கட்சியினர் இனிப்புகள் வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு வழங்கி பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற சூழலில்,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் ஏற்பாட்டில் தவெக கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், பால்ராஜ் தலைமையில் வழக்கறிஞர் சங்கத்தினர் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

இதில் ஏராளமான வழக்கறிஞர் கலந்துகொண்டு தமிழக முதல்வர் – ன் பிறந்த நாளை கொண்டாடினர்.