• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Jun 23, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது.,

இன்று நகராட்சி அலுவலகத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் உசிலம்பட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி தலைமையில் நகர்மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 24 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்தல், குழாய் பழுதி நீக்கம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளுதல், கீழப்புதூரில் பொதுக் கழிப்பிடம் பணிக்கு ஒப்பந்த புள்ளிகள் அனுமதி வேண்டுதல் உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் சாலை வசதி மேற்கொள்வதாகவும், பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை என அதிமுக மற்றும் திமுக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் பொறியாளர் சசிகுமார் கூறிய பணிகள் அனைத்தும் எதனால் நடந்தது எப்படி நடந்தது என்று அனைவருக்கும் தெரியும், கவுன்சிலர்கள் சொல்லி இந்தப் பணிகள் நடைபெறவில்லை என 20 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மேலும் வார்டு பகுதிகளில் தள்ளுவண்டி கூட இல்லை என பெண் கவுன்சர்கள் குற்றம் சாட்டி காரசார வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நகர் பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து இருப்பதாகவும் 140 இடங்களில் சாலையைப் பேஜ் ஒர்க் செய்தால் 100 இடங்கள் என எழுதுவதால் ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய மறுப்பதாக பொறியாளர் மீது கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.

மேலும் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் சாலைகள் அமைக்க கூடாது என பொதுமக்கள் தடுப்பதாக 5 வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரன் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து கவுன்சிலர் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என நான் சொன்னால் வேலை நடக்காது மற்றவர் வந்து சொன்னார் வேலை நடக்கும் சென்ட்ரல் பண்டில் கூட கட்டுங்கள் உடனே கட்டி முடியுங்கள் என்று சொல்லவில்லை 14 வது திமுக கவுன்சிலர் பிரியா ஆதங்கத்துடன் கேள்வியை எழுப்பினர்.

மேலும் இந்தக் கூட்டத்தில் 23 வார்டு கவுன்சிலர் சார்பாக நகராட்சி பொறுப்பு ஆணையாளர் முத்துலட்சுமி -யிடம் பொறியாளர் சசிகுமார் – யை மாற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 23 கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு புகார் மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.