மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், வி.கே.சசிகலா வருகையோட்டி ஏராளமான ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்றனர்.