• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,

ByP.Thangapandi

Apr 21, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் சுமார் 200 க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் புகார் தெரிவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி- பேரையூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து போலீசார் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி ஒன்றிய அதிகரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ன உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.