• Tue. Dec 10th, 2024

ஜெயலலிதாவின் பிரச்சார வாகனத்தில் வந்து மதுரை தேவர் சிலைக்கு மரியாதை செய்தார் வி.கே.சசிகலா. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், அதிமுக – அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, இன்றே மரியாதை செய்தார்.

முன்னதாக, தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்திருந்த அவர், தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அதிமுக கொடியுடன் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

இன்று காலையில் அளவில் ஓட்டலில் இருந்து கிளம்பியவர், ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் மதுரை கோரிப்பாளையம் வந்தார். அவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காலை முதலே லேசான சாரல் மழை பெய்த நிலையில், அதிமுக, அமமுக கொடியுடன் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அதனை தொடர்ந்து, அந்த பிரச்சார வாகனத்திலேயே மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர், பசும்பொன் சென்றார்.