• Wed. Jan 22nd, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மத்திய அரசு வழங்கியுள்ளது போல் 1.7.21 முதல் 14% (11 % +3.% ) அகவிலைப்படி உயர்வினை தீபாவளிக்கு முன்னர் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு உரிமையினை உடன் திரும்ப வழங்க வேண்டும்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் திரு.மு.சுப்பிரமணியன் அவர்களது தற்காலிகப் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்க வேண்டும் எனக்கோரி இன்று மதிய உணவு இடைவேளை 1 மணியின் போது, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என வளாக கிளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.