நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்கு பிறகு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரேனா குமார் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்பு அவர் மீது தரப்பட்ட பல மோசமான கமெண்ட்கள் தற்போது இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்.
தற்போது கௌதம் மேனன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சில பேட்ச் வொர்க்கிற்காக படக்குழு தற்போது வேலை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பல கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சிம்பு பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.