

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறாக கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜூன். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் படத்திற்கான ரிலீசை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி அவரது புதிய கெட்டப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் புஷ்பா 2 படத்தில் அவரது புதிய லுக் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
