• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் வசந்த்!

By

Sep 7, 2021 ,

உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 1ம் தேதி மாரடைப்பால் காலமானர். அவருடைய உடல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ,சீமான் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அன்றைய தினமே பெரியகுளம் கொண்டு செல்லப்பட்ட விஜயலட்சுமியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அன்று மாலையே விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமாகிய ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருடைய துணைவியார் விஜயலட்சுமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், ஓ.பி.எஸுன் மூத்த மகனான இரவீந்திரநாத்திற்கும் ஆறுதல் கூறினார்.