• Sun. Mar 26th, 2023

25 டன் ரேஷன் அரிசி பதுக்கல் – 4 பேர் கைது!

By

Sep 7, 2021 ,

விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டுள்ளதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார், மொத்தம் 25 டன் எடை கொண்ட 484 மூட்டைகள் மற்றும் 3 டன் எடை கொண்ட கோதுமை ஆகியவை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, ரேஷன் பொருட்களை பதுக்கியதாக கண்ணன்,விக்னேஷ், அழகு மூர்த்தி, நாககுமார் ஆகிய 4 போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *