• Tue. Sep 17th, 2024

தெரு நாய்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்.. மதுரையில் அரங்கேறிய குதூகலம்!

தேசிய நாய் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த நட்சத்திரா என்ற இளம்பெண் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து நாய்களுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவுகளை வழங்கியதோடு, நாய்களுக்கு ஒளிரும் பட்டைகளை (ரிப்ளக்ட் காலர்) கழுத்தில் அணிவித்தும் உள்ளார்.

இதனை தொடர்ந்து நாய்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சி கோளாறுகளை நீக்கும் மாத்திரைகளை வழங்கி நட்சத்திரா குடும்பத்தினர் சர்வதேச நாய் வளர்ப்பு தினத்தினை கேக் வெட்டி கொண்டாடியதோடு நாய்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வுகள் குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *