தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் விஜய் படம் பதித்த கொடியினை பயன்படுத்தியதால், இதை தடைவிதிக்க கோரி விஜய் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் பலரும் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
அதில், 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கருபடித்தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் இயக்க நகர செயலர் பிரபு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.