தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தொடர் மழையின் காரணமாக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடையநல்லூர் பகுதியில் உள்ள பல குளங்களில் நீர் பெருகிவருகிறது.
கடையநல்லூரில் நீர்பிடிப்பு குளமாக கருதப்படும் அட்டை குளம் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில்நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி உள்ளனர்.