• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி….பைனலுக்கு பலப்பரீட்சை…

Byகாயத்ரி

Dec 24, 2021

விஜய் ஹசாரோ கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று ஜெய்பூரில் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் இமாச்சல் பிரதேசம்-சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.

காலிறுதி ஆட்டங்களில் ரிஷி தவான் தலைமையிலான இமாச்சல் அணி உத்ரபிரதேசத்தை ஊதித் தள்ளியும், ரஜத் பாலிவால் தலைமையிலான சர்வீசஸ் அணி கேரளாவை காலியாக்கியும் அரையிறுதிக்கு முன்னேறின.

இரு அணிகளும் சமபலத்தில் இருப்பது போல் தோன்றினாலும் சர்வீசஸ் அணி முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன.

விஜய் ஹசாரே கோப்பையை அதிக முறை வென்ற அணியாக உள்ள தமிழ்நாடு 7வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதற்கேற்ப விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ஹரிநிஷாந்த், இந்தரஜித், ஷாருக்கான், சாய்கிஷோர், அபரஜித், வாஷிங்டன், சிலம்பரசன், சித்தார்த், சாய் சுதர்சன, கவுசிக் காந்தி ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதே நேரத்தில் ஜெயதேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

அதன் நடுகள வீரர்கள் ஷெல்டன், மன்கட், வசவத்தா, வியாஸ் ஆகியயோர் சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்தி விடுகின்றனர். அது தொடர்ந்தால் சவுராஷ்டிரா 3வது முறை இறுதி ஆட்டத்தை எட்டிப் பார்க்கலாம்.