• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..,

ByK Kaliraj

Aug 13, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சோனி பட்டாசு தொழிற்சாலை, விநாயகா பட்டாசு தொழிற்சாலை, அலுவலகம், மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 2,500 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு.

“போதை இல்லா சமுதாயம் – பாதுகாப்பான எதிர்காலம்” என்ற உறுதியுடன், போதைப்பொருளைத் தவிர்ப்போம்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

என்ற கோஷங்கள் எழுப்பி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பஞ்சு ராஜன் டிரஸ்ட் சார்பில் உரிமையாளர்கள் கார்வண்ணன், கணேசன், ஆகியோர் செய்து இருந்தனர்.