• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கோவை, நீலகிரியில் மிக கனமழை தொடரும்

ByA.Tamilselvan

Sep 2, 2022

கோவை ,நீலகிரி பகுதியில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.