• Fri. Mar 29th, 2024

தென்காசி மாவட்டத்தில் வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர்மேலாண்மை ஆணையம் சார்பாக வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்றது பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் தமிழக முழுவதும் மாநில அளவிலான வெள்ளம் குறித்த ஒத்திகை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து இடங்களில் இந்த பேரிடர் மேலாண்மை வெள்ளம் குறித்த ஒத்திகை நடைபெற்றதில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர். இலத்தூர். குற்றாலம் அருவிக்கரை. ஆலங்குளம் (நெட்டூர்) ந பெருமாள்பட்டி (தொழிற்சாலை விபத்து) பாதுகாப்பு என ஐந்து இடங்களில் நடைபெற்றது .
கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் தனி துணை ஆட்சியர் பேரிடர் மேலாண்மை மேற்பார்வையாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். கடையநல்லூர் வட்டாட்சியர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் குறுவட்ட ஆய்வாளர் சங்கரேஸ்வரி (பொறுப்பு) வரவேற்புரை ஆற்றினார்.
வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் வருவாய் துறை தீயணைப்பு துறை மின்சார துறை கால்நடைத்துறை மருத்துவத்துறை மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை காவல்துறையினர் சார்பில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தேசிய மாணவர் படை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் கிராமம் தாமரைக் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீ அணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசனின் வர்ணனையில் பேரிடர் ஒத்திகை என்பது வெள்ள நீர் அபாயத்திலிருந்து காலி பிளாஸ்டிக் பாட்டில் மூடை வீட்டிலுள்ள காலி சிலிண்டர் வாழைமட்டை ட்ரம்கள் போன்றவைகள் மூலம் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்த பின் என்ன முதலுதவி செய்வது அதற்கு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மருந்து மாத்திரைகள் குடிநீர் உணவு வழங்குவது முகாம்களில் சேர்ப்பது இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். பள்ளி மாணவ, மாணவிகள் பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

பேரிடர் விபத்து காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதையும் செய்து காட்டினர். பேரிடர் காலங்களில் அரசு சார்பில் வருவாய் துறையினரோடு உள்ளூர் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம், மின் வினியோகம் தடை செய்ய மின்சார வாரியம் ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் இவர்களோடு பொதுமக்களில் குறிப்பாக இளைஞர்கள் தன்னார்வல அமைப்புகள் கூட்டு சேர்ந்து பணி செய்வதன் மூலம் பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதை உணர்த்தினர்.

வருவாய் துறை சார்பில் துணை வட்டாட்சியர் மணிகண்டன் கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் (பொ) ராமச்சந்திரன் உதவியாளர்கள் ரமேஷ் வேலம்மாள் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரமைப்பு அலுவலர் ஹாஜா முகைதீன் நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மின்சார வாரியம் உ தவிசெயற்பொறியாளர் மாரியப்பன் இளநிலை பொறியாளர் அருண்குமார் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் சுப்புலட்சுமி என 50 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பால்ராஜ் உட்பட தீயணைப்பு மீட்பு வீரர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *