கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. பிளாண்டை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. பிளாண்ட் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ வுமான கடம்பூர் ராஜூதலைமை வகித்து புதிய ஆர்.ஓ. பிளாண்டை திறந்து வைத்தார். டாக்டர்கள் ஸ்ரீவர்ஷனி, கணேஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர் மாரியப்பன், வர்த்தக பிரிவு தலைவர் காமராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஸ்ரீதர், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கேவில்பட்டி ஆவின் சேர்மன் தாமோதரன், எம்ஜிஆர் மன்றம் நவநீதகிருஷ்ணன், ராமசுப்பு, விவசாய அணி ராமச்சந்திரன், கிளை செயலாளர் நாகராஜ், வார்டு செயலாளர் மாரியப்பன், காண்ட்ராக்டர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.