

திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில், 1920 நவம்பர் 12ல் பிறந்தவர், வல்லிக்கண்ணன்; இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி. 16 வயதிலேயே கவிதை எழுதத் துவங்கினார்.பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளராக இருந்தவர்,
அதில் இருந்து விலகி, முழு நேர எழுத்தாளராக மாறினார். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார்.
‘சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன், ஹனுமான்’ ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தார். ‘நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி, பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம்’ போன்ற பல புனைபெயர்களில் கட்டுரை எழுதியுள்ளார். ‘நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி, கேட்பாரில்லை, அத்தை மகள்’ உட்பட 75க்கும் மேற்பட்ட நுால்கள் எழுதியுள்ளார்.
இவரது, ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை, பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.’புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நுாலுக்காக, ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றார்.
“வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2006 நவம்பர் 9ல், தன் 86வது வயதில் காலமானார்.இவர் பிறந்த தினம் இன்று!
