

எழுத்துலகில், ‘இந்திரா சவுந்தர்ராஜன்’ என்ற புனைப் பெயரில் செயல்பட்டு வருந்தவர் சவுந்தர்ராஜன். சேலத்தில் 1958 நவ., 13ல் பிறந்தவர்.ஹிந்து பாரம்பரியம், புராணம் ஆகியவற்றை கலந்து எழுதுவதில் திறமையுடையவராக உள்ளார்.
சிறுகதை, நாவல், ‘டிவி’ தொடர்கள், திரைக்கதை என, பல தளங்களில் இயங்கி வருகிறார்.ஆன்மிகம், மறுபிறவி போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் இவரின் கதைகளுக்கு, பரவலான வாசகர் வட்டம் உண்டு. இதுவரை இவர், 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு 105 தொடர்கள் எழுதியுள்ளார். 201 புத்தகங்களை எழுதியுள்ளார்.
‘ருத்ர வீணை, விடாது கருப்பு’ உள்ளிட்ட பல கதைகள், ‘டிவி’ தொடர்களாக வெளிவந்து வரவேற்பை பெற்றன.சிறந்த மேடை பேச்சாளரான அவர், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று!
