தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரனாவர் டி. பி. ராஜலட்சுமி என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி. தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
1943 ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் நடித்திருந்தார். தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். டி. பி. ராஜலட்சுமி தன்னுடன் நடித்த டி.வி.சுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார்.
‘ராஜலட்சுமி ஸ்ரீராஜம் டாக்கீஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, மிஸ் கமலா என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதி, கதாநாயகியாக நடித்து, இவரே இயக்கி வெளியிட்டார். இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர், பெண் இயக்குனர் என்ற பெருமையும் பெற்றார். டி. பி. இராஜலட்சுமி இறுதிக் காலத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு 1964 ஆம் ஆண்டில் இறந்தார்.இந்த சாதனை ராணி பிறந்த தினம் இன்று!