• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,

ByP.Thangapandi

Apr 22, 2026

நாளை நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.,

இதன் முக்கிய பணிகளில் ஒன்றான வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 342 வாக்குச்சாவடி மையங்களுக்கு உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து வாக்கு பெட்டிகள் தேர்தல் அலுவலர்களின் பரிசோதனைகளுக்கு பின் சீல் வைக்கப்பட்டு அந்த அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.,

10 வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டலம் என சுமார் 35 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வாக்கு பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.,