உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி நகர இளைஞரணி சார்பில் கூழக்கடை பஜார் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

உடையார் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளர் ராம்துரை, இளைஞரணி அப்துல் ரஹீம், முகம்மது ரபீக், முன்னாள் நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம், நகர பொருளாளர் சேக்பரீத், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ராமராஜ், கேசவன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
