உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சியில் ஓம் பிரணவ ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திமுக இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இலஞ்சியில் உள்ள ஓம் பிரணவ ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதனின் ஏற்பாட்டில், கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் தலைமையில், மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமார் பாண்டியன், தொழிலதிபர் பாலகிருஷ்ணன், மேலகரம் பேரூர் கழக செயலாளர் சுடலை, குற்றாலம் இசக்கி பாண்டியன், விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.