தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட் வழங்கியும், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் அணி சார்பில் மரக்கன்றுகள் நட்டும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் கொண்டாடினர்.


நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், வக்கீல் குமார் பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் கபிலன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குற்றாலம் குட்டி, தொழிலதிபர் பாலகிருஷ்ணன், மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, ஒன்றிய குழு உறுப்பினர் மல்லிகா குற்றாலம் இசக்கிபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் மல்லிகா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.