விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் D. ரமேஷ்.கடந்த 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றிய ரமேஷ் 02 05 2026 அன்று பணி ஓய்வு பெற்றார்.

அன்னாரது சேவைய பாராட்டும் விதமாக அவரது முன்னாள் மாணவர்கள் இன்று குதிரை சாரட்டில் அமர வைத்து நகரில் ஊர்வலமாக மேளா தளத்துடன் அழைத்து சென்று தங்களது குரு விசுவாசத்தை நிரூபித்தனர். ரமேஷ் விருதுநகரில் ரெட் ரோஸ் என்ற பெயரில் கிளப் அமைத்து நூற்றுக்கும் அதிகமான ஹாக்கி வீரர்களை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




