• Thu. Aug 18th, 2022

தேவையானவை:
புழுங்கல் அரிசி – 250 கிராம், கறுப்பு உளுந்து – 100 கிராம், துவரம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.