• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒன்பதாவது புத்தக திருவிழா..,

Byமுகமதி

Nov 25, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளை ஒருங்கிணைத்து கலை இலக்கியப் போட்டி புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டிகள் 1.பேச்சுப்போட்டி 2.கவிதை போட்டி 3.ஓவியப்போட்டி மற்றும் 4.வினாடி வினா போட்டி என நான்கு வகையான போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியினை மாவட்ட துணைத் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சதாசிவம் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா நடைபெறும் போது பரிசுகள் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகளாக புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். கணேசன் ஒருங்கிணைத்து நடத்தித் தந்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளராக முனைவர் ஆர். பிச்சைமுத்து, முனைவர் ஆர். ராஜாங்கம் ஆகியோர் செயல்பட்டனர். நடைபெற்ற போட்டிகளுக்கு நடுவர்களாக தமிழ்நாடு அறிவில் இயக்க இணைச் செயலாளர் ஜெரினா பேகம் ஒன்றியச் செயலாளர் மீனாட்சி, ஜேஜே கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் தயாநிதி, மற்றும் கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ரமா. ராமநாதன், மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் எஸ். ஸ்டாலின் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியாக புத்தகத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான பிச்சைமுத்து நன்றி கூறினார்.