

தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
மைதா மாவு – 1ஃ3 கப்
முந்திரி பிஸ்தா தூள் – சிறிது அளவு
பொரிப்பதற்குஎண்ணெய்
சக்கரை – 3 கப்
தண்ணீர் – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை சிறு தீயில் நன்றாக கொதிக்க விடவும். அதனின் ஏடுகளை பாலுடன் கலந்து விட்டு கொதிக்க வைக்கவும். 45 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரம் கழித்து அனைத்து பாலும் சுருண்டு கோவா போல வரும். இந்தக் கோவாவுடன் மைதா மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொண்டு, பாதுஷா போல் செய்து, கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து போட்டு பொரித்து வைத்துக் கொள்ளவும்.
சக்கரையுடன் 2 கப் தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். அதில் பொரித்து வைத்த மக்கான் பேடாவை போட்டு 5-6 மணி நேரம் ஊற வைக்கவும். சுவையான மக்கன் பேடா தயார்.
