• Sat. Apr 1st, 2023

மரவள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
மரவள்ளிக்கிழங்கில் அடை செய்யலாம். வெல்லம் சேர்த்து வேக வைத்தும் சாப்பிடலாம். சிப்ஸ்கூட தயாரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *