• Thu. Apr 25th, 2024

டாப் 10 செய்திகள்

Byமதி

Oct 7, 2021
  1. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து, வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுது.
  1. தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  2. காவிரி நதியில் மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக் கொல்லிகள் அதிக அளவில் இருப்பதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  3. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினசரி 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
  4. பைடன் அரசு மிகவும் பலவீனமாகவும் ஊழல் நிறைந்ததாக இருப்பதாகவும் அதை சீனா சற்றும் மதிப்பதில்லை என்றும், இறுதியாக சீனாவுடன் போர் தொடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா வரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
  5. 2021 இலக்கியத்துக்கான நோபல் பரிசை எழுத்தாளர் அப்துல்ரசாக் குருனாவுக்கு அறிவிப்பு.
  6. பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர்.
  7. ‘நம்ம பீச், நம்ம சென்னை’ என்ற சென்னையை சேர்ந்த கடற்கரையையும் பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைக்க உதவும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கழிவறையை சுத்தம் செய்தார்.
  8. தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது .
  9. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தையும், ஆர்யா நடித்த ’டெடி’ திரைப்படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *