வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என வருமானவரித்துறை அறிவிப்பு. இன்று அதிக எண்ணிக்கையில் வருமானவரி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு.
2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், நேற்று இரவு 8.36 மணி வரை 5 கோடிக்கு அதிகமான வருமான வரிதாக்கல் முடிந்துள்ளது. இதற்கான கடைசி நாள் 31-ந்தேதி (இன்று) என்பதால் நீங்களும் உங்கள் வரிதாக்கலை செய்து அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வருமான வரி செலுத்துவோரை அறிவுறுத்தி இருந்தது. கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்து இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வரிதாக்கல் நடைபெறும் என வருமான வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.